News October 18, 2024

டீயுடன் ரஸ்க் சாப்பிடுபவரா நீங்கள்? இதை படியுங்கள்

image

டீயுடன் ரஸ்க் சாப்பிடும் பழக்கம் சிலருக்கு இருக்கும். இது சில உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ரஸ்கில் கொழுப்பும், சர்க்கரையும் இருப்பதாகவும், அது இதய நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ரஸ்கில் உள்ள க்ளுடன் உடலில் ஒவ்வாமை, அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கின்றனர். SHARE IT

Similar News

News August 20, 2025

பதவி பறிப்பு மசோதா: கூட்டுக் குழுவுக்கு அனுப்பிவைப்பு

image

PM, CM பதவி பறிப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. மசோதாவின்படி 30 நாள்களுக்கு மேல் சிறையில் இருந்தால் 31வது நாளில் அவர்களுடைய பதவி தானாக பறிக்கப்படும். இது மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை பதவியில் இருந்து நீக்கும் பாஜகவின் திட்டம் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இந்த நிலையில் மசோதா நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பப்படும் என அமித் ஷா குறிப்பிட்டார்.

News August 20, 2025

Cambridge Dictionary-யில் 6,000 புதிய ஆங்கில வார்த்தைகள்

image

பாக்கெட் டிக்ஸ்னரி வைத்திருந்த காலந்தொட்டே ‘Cambridge Dictionary’-க்கு அதிக மவுசு. காரணம், புதிய ஆங்கில வார்த்தைகள் இந்த டிக்ஸ்னரியில்தான் முதலில் இடம்பெறும். இந்நிலையில், 6,000-க்கும் அதிகமான புதிய ஆங்கில வார்த்தைகள் Cambridge Dictionary-யில் சேர்க்கப்பட்டுள்ளன. Skibidi, Delulu, Broligarchy, Tradwife ஆகிய வார்த்தைகளும் இணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் சமீபத்தில் பார்த்த புதிய ஆங்கில வார்த்தை எது?

News August 20, 2025

Asia Cup: 5 கேப்டன்கள்.. 8 முறை சாம்பியன்ஸ்

image

ஆசிய கோப்பை 2025 தொடர் செப்.9-ல் துபாயில் தொடங்குகிறது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியினர் களம் காண்கின்றனர். 1984-ம் ஆண்டு இத்தொடர் அறிமுகமானதில் இருந்து இதுவரை இந்தியா 8 முறை கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. 5 கேப்டன்கள் இக்கோப்பையை வென்றுள்ளனர். அவர்கள் யார், எப்போது வென்றனர் என்ற முழுத் தகவல்களை மேலே உள்ள படங்களில் பாருங்கள்.

error: Content is protected !!