News October 18, 2024

நேதாஜியின் பொன்மொழிகள்

image

*சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை. எடுக்கப்படுகிறது.
*கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!
*போராட்டம் இல்லாத வாழ்க்கை வெறுப்பு அடித்து விடும்
*ஒரு சிந்தனைக்காக மனிதன் இறக்கலாம். ஆனால் அவனது சிந்தனைகள் அதன் பின் 1000 பேரிடம் செல்லும்
* முயற்சிகளும் தியாகங்களும் நம்மை நமது சொந்த திறனால் சுதந்திரம் பெற உதவும்.

Similar News

News July 4, 2025

விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு, தவெக நிர்வாகி தற்கொலை

image

விஜய்க்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு புதுச்சேரி தவெக நிர்வாகி தற்கொலை செய்து கொண்டார். விபத்தில் சிக்கியதால் TVK நிர்வாகி விக்ரம், ₹3.80 லட்சத்துக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்துள்ளார். இதனால், பணம் கொடுத்த தனசேகரன், விக்ரம், மனைவி, குழந்தைகளை மோசமாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த விக்ரம், தவெக அடையாள உறுப்பினர் அட்டையுடன் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

News July 4, 2025

தமிழ் கடவுளை தரிசிக்க இன்று முதல் சிறப்பு பேருந்து

image

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனையொட்டி, இன்று முதல் 6-ம் தேதி வரை திருச்செந்தூருக்கு பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதேபோல், பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப ஏதுவாக 7-ம் தேதி திருச்செந்தூரில் இருந்தும் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

News July 4, 2025

GST வரியை குறைக்க முடிவு.. விலை குறையும் பொருள்கள்!

image

56-வது GST கவுன்சில் கூட்டத்தில் வரி விதிப்பு முறையில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் டூத்பேஸ்ட், சோப்பு, ஐஸ்கீரிம் ஆகியவை 18% லிருந்து 12% பட்டியலுக்கு மாற வாய்ப்புள்ளது. மேலும், நெய், வெண்ணெய், குடை, ஜாம், பழச்சாறு, மருந்துப் பொருள்கள் 5% வரி பட்டியலுக்கு மாற்றப்பட உள்ளதாம். இதனால் நடுத்தர மக்களின் சுமை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!