News October 18, 2024

ஏடிஎம்-மில் கிழிந்த ரூபாய் வந்ததா? கவலை வேண்டாம்

image

ஏடிஎம்மில் பணம் எடுக்கையில் சிலருக்கு கிழிந்த நோட்டு வருவதுண்டு. அதைக்கண்டு கவலைப்பட தேவையில்லை. அருகிலுள்ள அந்த ஏடிஎம் வங்கிக்கு சென்று, எடுக்கப்பட்ட தொகை, நேரம் உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இதுபோல 20 நோட்டுகளை வரை கொடுக்கலாம். ஆனால் அத்தொகை 1 நாளில் ரூ.5,000க்கு மிகக் கூடாது. அப்படி அளித்தால் மாற்று ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் தரும்.

Similar News

News July 4, 2025

FLASH: க்யூட் நுழைவுத் தேர்வு முடிவு வெளியானது

image

சென்ட்ரல் யுனிவர்சிட்டி மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் UG, PG படிப்புகளில் சேருவதற்கான க்யூட்(CUET) நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது. <>www.nta.ac.in<<>> இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது பதிவு எண், Password-ஐ பதிவிட்டு முடிவுகளை அறியலாம். நாடு முழுவதும் கடந்த மே 13 முதல் ஜூன் 4-ம் தேதி வரை நடைபெற்ற இத்தேர்வை 13.5 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.

News July 4, 2025

விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு, தவெக நிர்வாகி தற்கொலை

image

விஜய்க்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு புதுச்சேரி தவெக நிர்வாகி தற்கொலை செய்து கொண்டார். விபத்தில் சிக்கியதால் TVK நிர்வாகி விக்ரம், ₹3.80 லட்சத்துக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்துள்ளார். இதனால், பணம் கொடுத்த தனசேகரன், விக்ரம், மனைவி, குழந்தைகளை மோசமாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த விக்ரம், தவெக அடையாள உறுப்பினர் அட்டையுடன் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

News July 4, 2025

தமிழ் கடவுளை தரிசிக்க இன்று முதல் சிறப்பு பேருந்து

image

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனையொட்டி, இன்று முதல் 6-ம் தேதி வரை திருச்செந்தூருக்கு பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதேபோல், பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப ஏதுவாக 7-ம் தேதி திருச்செந்தூரில் இருந்தும் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

error: Content is protected !!