News October 18, 2024
யார் இந்த சின்வார்? (2/3)

1987இல் <<14385887>>ஹமாஸ் <<>>உருவானபோது, அதற்குள்ளேயே அல் மஜித் என்ற படையை உருவாக்கினார். இஸ்ரேலுக்கு உதவிய பாலஸ்தீனர்களை தேடிப்பிடித்து அந்தப் படை வேட்டையாடியது. 1988இல் 12 பாலஸ்தீனர்களை கொன்றதாக சின்வாரை இஸ்ரேல் கைது செய்து, 4 ஆயுள் தண்டனை விதித்தது. எனினும் 2011 கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் மூலம் சின்வார் விடுவிக்கப்பட்டார். காசாவில் ஹமாஸ் ஆட்சியிலிருக்க சின்வாரின் செல்வாக்கு அதிகரித்தது.
Similar News
News July 4, 2025
FLASH: க்யூட் நுழைவுத் தேர்வு முடிவு வெளியானது

சென்ட்ரல் யுனிவர்சிட்டி மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் UG, PG படிப்புகளில் சேருவதற்கான க்யூட்(CUET) நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது. <
News July 4, 2025
விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு, தவெக நிர்வாகி தற்கொலை

விஜய்க்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு புதுச்சேரி தவெக நிர்வாகி தற்கொலை செய்து கொண்டார். விபத்தில் சிக்கியதால் TVK நிர்வாகி விக்ரம், ₹3.80 லட்சத்துக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்துள்ளார். இதனால், பணம் கொடுத்த தனசேகரன், விக்ரம், மனைவி, குழந்தைகளை மோசமாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த விக்ரம், தவெக அடையாள உறுப்பினர் அட்டையுடன் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
News July 4, 2025
தமிழ் கடவுளை தரிசிக்க இன்று முதல் சிறப்பு பேருந்து

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனையொட்டி, இன்று முதல் 6-ம் தேதி வரை திருச்செந்தூருக்கு பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதேபோல், பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப ஏதுவாக 7-ம் தேதி திருச்செந்தூரில் இருந்தும் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.