News October 18, 2024
போர் தொடருகிறது… இஸ்ரேல் அறிவிப்பு

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டாலும் ராணுவ நடவடிக்கையை நிறுத்த மாட்டோம் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதோடு தங்களது பணி முடிந்து விடவில்லை என்றும், ஹமாஸ் கட்டுப்பாட்டில் இன்னும் 101 பேர் இருப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியுள்ளது. எந்த வகையிலாவது பிணைக் கைதிகள் அனைவரையும் மீட்போம் என்றும், அதுவரை ஓய மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளது.
Similar News
News July 4, 2025
GST வரியை குறைக்க முடிவு.. விலை குறையும் பொருள்கள்!

56-வது GST கவுன்சில் கூட்டத்தில் வரி விதிப்பு முறையில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் டூத்பேஸ்ட், சோப்பு, ஐஸ்கீரிம் ஆகியவை 18% லிருந்து 12% பட்டியலுக்கு மாற வாய்ப்புள்ளது. மேலும், நெய், வெண்ணெய், குடை, ஜாம், பழச்சாறு, மருந்துப் பொருள்கள் 5% வரி பட்டியலுக்கு மாற்றப்பட உள்ளதாம். இதனால் நடுத்தர மக்களின் சுமை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News July 4, 2025
தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்: விஜய்

பரந்தூர் மக்களை CM ஸ்டாலின் நேரில் சந்தித்து பேச வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை ஸ்டாலின் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இல்லை என்றால் பரந்தூர் மக்களை அழைத்து வந்து தலைமைச் செயலகத்தில் ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிடும் நிலை உருவாகும் எனவும் விஜய் எச்சரித்துள்ளார்.
News July 4, 2025
முதல்வர் வேட்பாளர் விஜய் .. தவெக தலைமையில் கூட்டணி

2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான முழு அதிகாரமும் விஜய்க்கு அளிக்கப்படுவதாகவும் செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்டில் தவெக மாநில மாநாடு நடைபெறும் என்றும், அக்., முதல் டிச., வரை தமிழகம் முழுவதும் விஜய் மக்களை சந்திப்பார் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.