News October 18, 2024
2.75 லட்சம் URLs மீதான தடை நீங்கியது

மொபைல் மூலம் மோசடி நடைபெறுவதை தடுக்க பதிவு செய்யாத நிறுவன லிங்க், URLsக்களை முடக்க தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு அக்.1 முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து சுமார் 10,000 நிறுவனங்கள் தங்களின் URLsக்களை பதிவு செய்து தடையை நீக்கியுள்ளன. இதனால் அவற்றின் லிங்க், URLsக்கள் மக்களுக்கு செல்வதில் இருந்த தடை நீங்கியுள்ளது. உங்களுக்கு லிங்க், URLs வருகிறதா?
Similar News
News July 4, 2025
தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்: விஜய்

பரந்தூர் மக்களை CM ஸ்டாலின் நேரில் சந்தித்து பேச வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை ஸ்டாலின் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இல்லை என்றால் பரந்தூர் மக்களை அழைத்து வந்து தலைமைச் செயலகத்தில் ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிடும் நிலை உருவாகும் எனவும் விஜய் எச்சரித்துள்ளார்.
News July 4, 2025
முதல்வர் வேட்பாளர் விஜய் .. தவெக தலைமையில் கூட்டணி

2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான முழு அதிகாரமும் விஜய்க்கு அளிக்கப்படுவதாகவும் செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்டில் தவெக மாநில மாநாடு நடைபெறும் என்றும், அக்., முதல் டிச., வரை தமிழகம் முழுவதும் விஜய் மக்களை சந்திப்பார் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
News July 4, 2025
க்ரைம் மிரட்டல் நாயகன் மைக்கேல் மேட்சன் காலமானார்

‘Kill Bill’, ‘Reservoir Dogs’ உள்ளிட்ட ஏராளமான க்ரைம் த்ரில்லர் படங்களின் மூலம் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன்(67) காலமானார். நேற்று மாரடைப்பு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது, மேலாளரும் லிஸ் ரோட்ரிக்ஸ் அறிவித்துள்ளார். சமீப காலமாக சினிமா பிரபலங்கள் பலரும் மாரடைப்பு காரணமாக மரணித்து வருகின்றனர். #RIP