News October 17, 2024

பாப்பிரெட்டிப்பட்டியில் கார் மோதி விபத்து: ஒருவர் பலி

image

பாப்பிரெட்டிப்பட்டி சேலம் செல்லும் வழியில் தனியார் கிழங்கு மில் அருகில் மில்லில் கிழங்கு இறக்கி விட்டு சென்ற லாரியும், காரும் மோதியதில் கார் நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த கம்பைநல்லூர் சவுளூர் பகுதியைச் சேர்ந்த முரளி (35) பலியானார். பாப்பிரெட்டிப்பட்டி ராஜேந்திரன் மகன் ராஜேஸ் (எ) விக்னேஷ் (30) படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News July 9, 2025

தர்மபுரியில் மகளிர் உரிமை தொகை குறித்து அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்குச் சென்று விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பத்தினை அளிக்கலாம். இந்த முகாமானது வரும் 15 ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடைபெறுகிறது. இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். *SHAREIT*

News July 9, 2025

தருமபுரி மாவட்டத்தில் பேச்சுப் போட்டிகள் தேதி அறிவிப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர்,முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளுக்கான பேச்சுப் போட்டிகள் முறையே 16,17 தேதி ஆகிய நாள்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் அனைத்துப் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 வரை மட்டும் கலந்து கொள்ளலாம்.

News July 8, 2025

நொரம்பு மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

image

பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதியான எர்ரணஅள்ளி மேம்பாலம் அருகே காவல்துறையினர் நடத்திய சோதனையில், ஏரியில் இருந்து சட்டவிரோதமாக நொரம்பு மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தினர். காவலர்களைக் கண்டதும் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடி தலைமறைவானார். சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!