News October 17, 2024
அக்.20ஆம் தேதி மாவட்ட அளவிலான போட்டி

கலை பண்பாட்டு துறை சார்பில் சிறுவர்கள் இடையே குரலிசை, பரதநாட்டியம் நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 4 கலை பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் விளாப்பாக்கம், ஸ்ரீ மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அக்.20ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 04427269148, 9751152828 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Similar News
News August 29, 2025
கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது

இன்று பாணாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவிந்தாங்கல் பகுதியில் பெரிய அளவிலான கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி சுற்றி திரிந்த வாலிபரை பாணாவரம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் சோளிங்கரை பகுதியைச் சேர்ந்த சுதன் 24 என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரிய வந்துள்ளது.
News August 29, 2025
ராணிப்பேட்டை : B.Sc,B.E.,B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு

ராணிப்பேட்டை மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் இங்கு <
News August 29, 2025
ராணிப்பேட்டை: அமெரிக்காவால் தோல் தொழிலுக்கு சிக்கல்

ஆம்பூர், வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் இருந்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அமெரிக்காவின் 50 சதவீத கூடுதல் வரியால், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய பொருட்களின் வரவேற்பு குறைய வாய்ப்புள்ள நிலையில், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் தோல் பதனிடும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.