News March 18, 2024
அண்ணாமலையார் திருக்கோயிலில் டிடிவி தினகரன் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த அவர், அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தார். அப்போது கோவில் நிர்வாகத்தினர் அவருக்கு பூர்ண கும்பம் மரியாதையுடன் வரவேற்று சாமி தரிசனம் செய்ய வைத்தனர்.
Similar News
News August 19, 2025
திருவண்ணாமலை: ரயில்வே துறையில் வேலை! APPLY NOW

திருவண்ணாமலை இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், விவரங்களுக்கு https://rrccr.com/ என்ற இணைதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். ரயில்வேயில் வேலை பெற விரும்பும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News August 19, 2025
தி.மலை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தி.மலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை (ஆக.20)
திருவண்ணாமலை, வந்தவாசி, துரிஞ்சாபுரம், புதுப்பாளையம், அனக்காவூர், தண்டராம்பட்டு ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று, இறப்பு சான்று போன்றவற்றிக்கு மனு அளித்து பயன்பெறலாம். மேலும், <
News August 19, 2025
தி.மலை அருகே விபத்து

தி.மலை, அமர்நாத்புதூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களது மகள் திருமணத்திற்கு, உறவினர்களுக்கு அழைப்பிதழ் வழங்க பைக்கில் செல்வராஜ், பச்சையம்மாள் இருவரும் சென்றுள்ளனர். அப்போது கலசபாக்கம் அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியதில் பச்சையம்மாள் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.