News March 18, 2024
மாரியம்மன் கோயில் பூ குண்டம் திருவிழா

உதகை அருகே உல்லாடா கிராமம் உள்ளது . இந்திய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் கோயில் பூ குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினார்கள். அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
Similar News
News November 9, 2025
நீலகிரி ரோந்து காவலர் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (09.11.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள், வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
News November 9, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், எதிர்வரும் (நவ.14)ம் தேதி, காலை ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் உள்ள கீழ்த்தர கூட்ட அரங்கில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மருத்துவர்கள் மற்றும் முன்னாள் வங்கி மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தேவையான ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்க உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்துள்ளார்.
News November 9, 2025
நீலகிரி: இலவச பயிற்சியுடன் விமான நிலையத்தில் வேலை!

நீலகிரி மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் இங்கு <


