News March 18, 2024

யானைகள் நடமாட்டம்:  வனத்துறை அறிவிப்பு

image

கோவை மாவட்டம் கரடிமடை சுற்றுக்குட்பட்ட பச்சாபாளையம், தீத்திபாளையம், கரடிமடை, பேரூர், போஸ்டல் காலனி ஆறுமுககவுண்டனூர் ஹைடெக் சிட்டி பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இருசக்கர வாகனத்திலும் தனியாக நடந்து செல்வதையும் தவிர்க்குமாறு வனத்துறை சார்பாக தெரிவித்துள்ளனர். 

Similar News

News February 3, 2026

BREAKING: காரமடையில் யானை தாக்கி ஒருவர் பலி

image

காரமடை அடுத்துள்ள பில்லூர் அணையை சுற்றிலும் ஏராளமான பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் நள்ளிரவு பரளிக்காடு கிராமத்தில் ஒற்றை காட்டு யானை உலா வந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் யானையை விரட்ட முற்பட்டுள்ளனர். அப்போது, ஆக்ரோஷமான யானை தாக்கியதில் சிவக்குமார்(45) என்ற பழங்குடியின இளைஞர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 3, 2026

கோவை: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

image

கோவை மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<> இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News February 3, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் நேற்று (பிப்.2) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!