News October 17, 2024
சென்னையில் 531 இடங்களில் மழைநீர் அகற்றம்

சென்னையில் 542 இடங்களில் தேங்கியிருந்த மழைநீரில், 531 இடங்களில் நீர் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டறைக்கு 7470 அழைப்புகள் வந்துள்ளன. அதற்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. 1,720 பேர் தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்டு வரப்பட்டு 33 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Similar News
News September 13, 2025
சென்னை: 1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை APPLY NOW!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ APPLY செய்ய கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 13, 2025
சென்னை: சொந்த வீடு இருக்கா? மாநகராட்சி அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-26ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான ஏப்ரல் 2025 முதல் செப்.2025 வரை சொத்து வரியை செலுத்துவதற்கான கடைசி நாள் செப்.30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் வரியை செலுத்த தவறினால், அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News September 13, 2025
ஆதம்பாக்கம்: பெண் கையை பிடித்து இழுத்தவர் கைது

ஆதம்பாக்கம் பெரியார் நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் நடராஜன் (51). இவர் பாஜகவில் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த 40-வயது பெண்ணின் கையை பிடித்து இழுத்து, தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியதுடன் அதற்கு மறுத்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் ஆதம்பாக்கம் போலீசார் நடராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.