News October 17, 2024
நாகையில் மனநலம் பாதிக்கபட்ட 24 பேர் மீட்பு

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சாலை ஓரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிபவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டில் இதுவரை மாவட்டத்தில் 24 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திருவாரூர் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனநலம் தேறியவர்கள் அவர்களது உறவினர்களிடம் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
Similar News
News July 11, 2025
நாகையில் விழிப்புணர்வு ரதம் விழிப்புணர்வு பேரணி

நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு இன்று (ஜூலை 11) காலை 9.45 மணியளவில் விழிப்புணர்வு உறுதிமொழி, விழிப்புணர்வு ரதம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சியர் ப ஆகாஷ் தகவல் அறிக்கை வெளியிட்டுள்ளார். துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 11, 2025
நாகை: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (1/2)

தமிழகத்தில் காலியாக உள்ள ‘1996’ முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் <
News July 11, 2025
நாகை: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (2/2)

▶️ 58 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: 12/08/2025
▶️ தேர்வு நடைபெறும் தேதி: 28/09/2025
▶️ ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
▶️ கூடுதல் விவரங்களுக்கு<
▶️ இந்த தகவலை அரசு பள்ளி ஆசிரியராக விரும்பும் நபர்களுக்கு SHARE செய்யவும்