News March 18, 2024
சூது கவ்வும் 2 படத்தின் புதிய அப்டேட்!

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013இல் வெளியான படம் ‘சூது கவ்வும்’. இப்படம் வசூலை குவித்ததுடன், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் 2ஆவது பாகத்தை எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு பதிலாக மிர்ச்சி சிவா நடிக்கிறார். சூது கவ்வும் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 22ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.
Similar News
News April 19, 2025
சிறுமிகளுக்கு சர்ச் பாதிரியார் பாலியல் தொந்தரவு

மண்டபம், கோயில்வாடி புனித அருளானந்தர் சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிந்தவர் ஜான் ராபர்ட் (46). இவர் 2022ம் ஆண்டு வழிபாட்டிற்கு வந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். குழந்தைகள் நலக்குழுவின் புகாரில் போக்சோ வழக்கில் ஜான்ராபர்ட்டை கைது செய்தனர். இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றம் ஜான்ராபர்ட்டுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.9000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
News April 19, 2025
அதிமுகவில் இணைந்த தவெக மாவட்ட பொறுப்பாளர்!

TVK ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் முள்ளிமுனை P.P.ராஜா அதிமுகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்களுடன் அதிமுக மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதனை, ADMK IT விங் பதிவிட்டுள்ளது. விஜய் கட்சி தொடங்கி இன்னும் தேர்தலையே சந்திக்காத நிலையில், அவரது கட்சியிலிருந்து சிலர் விலகுவதும், கட்சிப் பொறுப்புக்கு பணம் வாங்குவதாக புகார் கூறுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
News April 19, 2025
எங்களுக்கு வேற வழி தெரியல: டிரம்ப்

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை நிறுத்த டிரம்ப் முயன்று வருகிறார். இரு தரப்பிடமும் 87 நாட்களாக தொடர்ந்து பேசி வருகிறார். இந்தச் சூழலில் இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒத்துவரவில்லை என்றால், தங்களால் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். போர் நிறுத்த முயற்சியை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை என பெரிய குண்டை தூக்கி போட்டிருக்கிறார் டிரம்ப்.