News October 17, 2024
தூத்துக்குடியில் பேரிடர் கால அவசர எண்கள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மாவட்ட பேரிடர் துறை சார்பில், பேரிடர் மற்றும் இயற்கை இடர்பாடுகள் பற்றி புகார் தெரிவிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தொலைபேசி எண் 0461-2340201, அலைபேசி 94864654714 மற்றும் டோல் ஃப்ரீ எண் 1077 ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளன.
Similar News
News September 13, 2025
மில்லர்புரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு – மேயர் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மில்லர்புரம் பகுதியில் குடிநீர் குழாய் செல்லும் பாதையில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், சுந்தரவேல்புரம் பகுதியில் பூங்கா அமைத்து தருமாறும் வந்த மாநகர மக்களின் கோரிக்கையினை தொடர்ந்து அதனை மேயர் ஜெகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் உடனிருந்தார்.
News September 12, 2025
தூத்துக்குடி மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

தூத்துக்குடி மக்களே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவை அவசியாக தேவைக்கப்படும் ஆவணங்களாக உள்ளது. இவை தொலைந்துவிட்டால் நேரடியாக அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
News September 12, 2025
திருச்செந்தூர் கோவிலை உறுதிமொழி குழுவினர்ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் குழு உறுப்பினர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் (சேலம் மேற்கு), மாங்குடி (காரைக்குடி), எம்.கே.மோகன் (அண்ணா நகர்) ஆகியோர் இன்று 12.9.25 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பாடசாலையை பார்வையிட்டு கள ஆய்வு நடத்தினர்.