News October 17, 2024
மதுவிலக்கு மாநிலத்தில் ஓயாத மரண ஓலம்

பிஹாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. ஷிவான், சரண் ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கெனவே 7 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 2016 முதல் மதுவிலக்கு அமலில் இருக்கும் மாநிலத்தில் கள்ளச்சாராய மரணங்கள் ஆண்டுதோறும் பதிவாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 16, 2025
மதுரை: மத்திய அரசில் 201 காலிப்பணியிடம்

UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். <
News August 16, 2025
BREAKING: ஆக.19-ல் NDA கூட்டணி MP-க்கள் கூட்டம்

PM மோடி தலைமையில் NDA கூட்டணி MP-க்கள் கூட்டம் ஆக.19-ல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு அன்றைய தினமே வேட்பாளர் அறிவிப்பு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
News August 16, 2025
SRH அணியில் பாண்ட்யா..? பதான் சொன்ன ரகசியம்

SRH ஆலோசகராக VVS லக்ஷ்மன் இருந்தபோதே, பாண்ட்யாவின் திறமையை கூறி அணியில் எடுக்க சொன்னதாக பதான் நினைவுகூர்ந்துள்ளார். ஆனால், பாண்டியாவின் திறமை குறித்து வெளியில் அதிகம் பேசப்படாததால், அவரை லக்ஷ்மன் அணியில் எடுக்கவில்லை எனவும், அதற்காக தற்போது வரை அவர் புலம்பி வருவதாகவும் பதான் பகிர்ந்துள்ளார். 2015-ல் ₹10 லட்சத்திற்கு MI-ஆல் வாங்கப்பட்ட பாண்டியா, தற்போது அந்த அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார்.