News October 17, 2024
சென்னையில் அனைத்து பள்ளிகளும் இயங்குகின்றன

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இன்று (அக்.16) பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக விடுக்கப்பட்ட அதி கனமழைக்கான ரெட் அலர்ட்-ஐ வானிலை மையம் விலக்கிக் கொண்டது. இதையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என்றும், அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக திருநங்கை தேர்வு

இன்று ராயப்பேட்டை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்வில், திருநங்கை சரண்யா தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை இவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பொன்னாடை அணிவித்து சரண்யாவை வாழ்த்தினார். காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
News July 8, 2025
சென்னை சைபர் கிரைம் எச்சரிக்கை

ஆன்லைன் வீடியோ கால் மூலம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட படங்களைக் காட்டி பணம் பறிக்கும் கும்பல்கள் குறித்து சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. இதுபோன்ற இணையவழி குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற தேசிய உதவி எண்ணை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகம் இன்று (ஜூலை 8) சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மக்கள் எந்த விதமான ஆபத்துகளில் சிக்காமல் இருக்க காவல்துறை எச்சரிக்கை.
News July 8, 2025
சென்னை விமான நிலையத்தில் இருந்து 20 லட்சம் பேர் பயணம்

சென்னை விமான நிலையத்தில் மே மாதம் 13449 விமானங்களில் 20 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டு இருப்பதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 12958 விமானங்களில் 19 லட்சத்து 38 ஆயிரம் பேர் பயணம் செய்திருப்பதாகவும், துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, டெல்லி, மும்பை, அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது