News October 17, 2024
ஆட்டிசம் திரைப்படம்: கண்ணீர் விட்ட முதல்வர் ரங்கசாமி

இந்தியாவில் ஆட்டிசம் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களை கருப்பொருளாக வைத்து, இயக்குநர் நரேஷ்குமார், நித்யபிரியா தயாரித்துள்ள, திரைப்படம் புதுச்சேரி தியேட்டரில் நேற்று திரையிடப்பட்டது. இதனை முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் பார்க்கும்போது, முதல்வர் ரங்கசாமி உணர்ச்சி வசப்பட்டு, கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரை துடைத்துக் கொண்டார். இது பார்ப்பவர்களை உணர்ச்சி வசப்படுத்தியது.
Similar News
News September 14, 2025
புதுவை: டிரைவர்களுக்கு போக்குவரத்து எஸ்பி எச்சரிக்கை

புதுச்சேரி வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீசார்- ஆட்டோ டிரைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று(செப்.13) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு போக்குவரத்து சீனியர் எஸ்பி நித்யா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது, ஆட்டோக்களுக்கான உரிய ஆவணங்களை சரியான முறையில் வைத்திருக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரித்தார்.
News September 14, 2025
புதுவையில் ஆசிரியர் தற்கொலை; போலீசார் விசாரணை

புதுவை மாநிலம் நெடுங்காடு பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வி. தனியார் பள்ளி ஆசிரியரான இவருக்கு, 2 ஆண்டிற்கு முன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில், மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு காலதாமதம் செய்ததால், விரக்தியடைந்த அவர் விசம் குடித்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து நெடுங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News September 14, 2025
புதுச்சேரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வருகிற செப்.21ம் தேதி நடைபெற உள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் 86 தேர்வு மையங்களில் நடைபெறும் இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை, தேர்வர்கள் <