News October 17, 2024
விவசாயிகளின் கவனத்திற்கு ஆட்சியர் அறிவிப்பு

சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைந்த வாடகைக்கு மண் தள்ளும் இயந்திரம், டிராக்டர்கள், மண் அள்ளும் இயந்திரங்கள், தேங்காய் பறிக்கும் இயந்திரம் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை உழவர் செயலி வழியாக இ-வாடகை செயலியில் வீட்டிலிருந்தே முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
சேலம்: மகளிர் உரிமைத்தொகை.. 80,277 பேர் விண்ணப்பம்!

கடந்த ஜூலை 15- ஆம் தேதி முதல் ஆக.23- ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் 70,363 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக் கோரிக்கை விண்ணப்பமாக மொத்தம் 80,277 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
News August 26, 2025
சேலம் வழியாக கண்ணூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

சேலம் வழியாக சென்னை சென்ட்ரலில் இருந்து கண்ணூருக்கு ஓணம் சிறப்பு ரயிலை (06009) அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆக.28-ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கண்ணூர் சென்றடையும். சேலம் ரயில் நிலையத்தில் மட்டும் சுமார் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 26, 2025
சேலம் வழியாக வேளாங்கண்ணிக்கு ரயில்கள்!

சேலம் வழியாக வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்களை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆக.27, செப்.01, 06 தேதிகளில் வாஸ்கோடகாமாவில் இருந்து வேளாங்கண்ணிக்கும், மறுமார்க்கத்தில், ஆக.29, செப்.03, 08 தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து வாஸ்கோடகாமாவிற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்று செல்லும்.