News March 18, 2024
5ஆவது முறை ரஷ்ய அதிபராகிறார் புதின்

ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகள் பெற்று வெற்றி பெறுவாரென தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிரான போர், கருத்து சுதந்திரம் முடக்கத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டன. ரஷ்ய அதிபர் தேர்தலில் புதினை எதிர்த்து 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று வாக்குப்பதிவு முடிந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
Similar News
News September 8, 2025
நாளை முக்கிய முடிவு… அறிவித்தது திமுக

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நாளை நண்பகல் 12 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து ஸ்டாலின் திரும்பிய நிலையில், நாளை நடைபெறவுள்ள மா.செ. கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
News September 8, 2025
துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் கட்சிகள்

ஜனாதிபதி தேர்தல்களில் பலமுறை பாஜகவுக்கு கைகொடுத்த பிஜு ஜனதா தளம் கட்சி, இந்த முறை துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என முடிவெடுத்துள்ளது. எந்த தரப்புக்கும் ஆதரவில்லை எனத் தெரிவித்துள்ள அக்கட்சிக்கு ராஜ்ய சபாவில் 7 எம்பிக்கள் உள்ளனர். இந்த தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என தெலங்கானாவின் பிஆர்எஸ் கட்சியும் அறிவித்துள்ளது. இக்கட்சிக்கு ராஜ்ய சபாவில் 4 எம்பிக்கள் உள்ளனர்.
News September 8, 2025
நாளைக்குள் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்.. அறிவிப்பு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வாக, அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரே நாளில் ஒரு மரக்கன்றை நட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பெற்றோருடன் மரக்கன்றை நட்டு அதனை புகைப்படமாக எடுத்து அரசின் https://ecoclubs.education.gov.in இணையதளத்தில் நாளைக்குள் அப்லோடு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் பசுமை இயக்க குழு பொறுப்பாசிரியர் இதனை ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.