News March 18, 2024
வீடியோ காலில் வாழ்த்து கூறிய விராட் கோலி!

WPL இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. கோப்பை வென்று அசத்திய பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு, ஆடவர் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பெங்களூரு நகரின் பல்வேறு தெருக்களிலும் வெற்றி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
Similar News
News November 4, 2025
வீரப்பன் வேட்டை: தமிழக அரசு மீது கோர்ட் காட்டம்

வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடி படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக ₹2.59 கோடி இழப்பீடு வழங்க TN அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இழப்பீடு வழங்க உத்தரவிட்டு ஓராண்டு ஆகியும் இன்னும் வழங்காதது கோர்ட் அவமதிப்பு செயல். இழப்பீடு என்பது மக்களின் பணம், அரசு வெறும் அறங்காவலர் மட்டுமே என்றும் காட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணையிட்டுள்ளது.
News November 4, 2025
மாரடைப்பை தடுக்க உதவும் உணவுகள்

இதய ஆரோக்கியம் குறையும்போது இதய நோய், மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதயத்தை பாதுகாக்கும் உணவுப் பழக்கங்கள் மிகவும் முக்கியம். தினசரி உணவில் நார்ச்சத்து, நல்ல கொழுப்பு போன்றவை சமநிலையில் இருக்க வேண்டும். இதற்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. உங்களுக்கு தெரிந்த உணவை கமெண்ட் பண்ணுங்க.
News November 4, 2025
அடுத்த வருஷம் 3 ட்ரீட்!

தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி இயக்குநராக இருக்கும் சுந்தர்.சி இயக்கத்தில் 2026-ல் 3 படங்கள் வெளிவரலாம் ✦ரஜினி- சுந்தர்.சி படம் 2026 தீபாவளிக்கு ரெடியாவதாக கூறப்படுகிறது ✦விஷால்- சுந்தர்.சி படம் 2026 சம்மரில் வெளியாகலாம் ✦நயன்தாரா நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படமும் அடுத்த ஆண்டு வெளியாகலாம். இந்த படங்கள் திட்டமிட்டபடி வெளியானால், 2026-ல் சுந்தர்.சியின் 3 ட்ரீட் காத்திருக்கு!


