News October 16, 2024
விளையாட்டு துளிகள்

➤Chess Masters: விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா மோதிய காலிறுதியின் முதல் போட்டி ‘டிரா’ ஆனது. ➤ISSF World Cup: மகளிர் 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் சோனம் வெள்ளிப் பதக்கம் வென்றார். ➤Hockey India League: இந்திய வீராங்கனை உதித்தாவை ₹32 லட்சத்துக்கு பெங்கால் அணி வாங்கியது. ➤சர்வதேச ஸ்குவாஷ் தொடர்: முதல் சுற்றில் அமெரிக்காவின் ஆட்ரேவை 3-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவின் ஜோஷ்னா வென்றார்.
Similar News
News August 15, 2025
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘விருக்ஷசனம்’!

✦இதய ஆரோக்கியம் மேம்படவும், கால் தசைகள் வலுப்பெறவும் உதவுகிறது
➥ஒரு காலில் நின்று கொண்டு, மற்றொரு காலை தொடை மீது வைத்து நிற்கவும்.
➥கைகளை தலைக்குமேல் உயர்த்தி, ஒன்றுடன் ஒன்று சேர்த்து வைக்கவும்.
➥30- 45 விநாடிகள் வரை இந்த நிலையில் இருந்து விட்டு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும்.
News August 15, 2025
EPS-க்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கும் OPS, சசிகலா!

ADMK, பல அணிகளாக பிரிந்து கிடந்தாலும் பொதுவெளியில் சில மாதங்களாக மோதல்கள் இல்லாமல் இருந்தது. இது, ஒன்றிணைப்புக்கான சமிஞ்ஞை என கூறப்பட்டது. ஆனால், அதற்கான காலம் கடந்துவிட்டது என EPS அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில், ADMK பொதுச்செயலாளர் எனக் கூறி சசிகலா வெளியிட்ட சுதந்திர தின வாழ்த்து, தலைமை பண்பு இல்லாத EPS என <<17402506>>OPS விமர்சனம்<<>> என்று மீண்டும் அதிமுகவின் தலைமை பதவிக்கு நெருக்கடியை கொடுக்கின்றனர்.
News August 15, 2025
திமுக கூட்டணிக்கு தற்போது தான் ரோஷம் வந்துள்ளது: EPS

தூய்மை பணியாளர்களின் வாக்குகளை பெறுவதற்காக எதிர்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். தற்போது அவர்களை சமாதானப்படுத்த அறிவிப்புகளை வெளியிடுகிறார் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். ஆம்பூரில் மக்கள் மத்தியில் பேசிய இபிஎஸ், தூய்மை பணியாளர்கள் கைது செய்ததை கண்டித்து MP சு.வெங்கடேசன், பெ.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளதாகவும், தற்போது தான் அவர்களுக்கு ரோஷம் வந்துள்ளதாகவும் கூறினார்.