News March 17, 2024

நாமக்கல் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியீடு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ,நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி தோறும் திங்கட்கிழமை என்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Similar News

News August 8, 2025

நாமக்கல்: முட்டை விலை 5 பைசா உயர்வு

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 8) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.

News August 8, 2025

நாமக்கல்: மத்திய அரசு வேலை: அரிய வாய்ப்பு!

image

இந்திய விமானப்படைக்கு அக்னிவீரர் பிரிவுக்கு, அக்னிவீரர் ஆட்சேர்ப்பு திரளணி தாம்பரம் விமானப்படை நிலையத்தில் வரும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் ஆண்களுக்கும் 5-ம் தேதி முதல் பெண்களுக்கும் நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரிலோ அல்லது 04286-222260 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்ககுக்கு<> இங்க கிளிக்<<>> பண்ணுங்க.

News August 8, 2025

நாமக்கல்லில் 94.1°F வெப்பம் பதிவு!

image

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் இன்றைய தினம் அதிகபட்ச வெப்பநிலையாக 94.1° ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. இதனால் சாலையோர வியாபாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும், வேலைக்கு செல்வோரும் அவதியடைந்துள்ளனர்.

error: Content is protected !!