News March 17, 2024
8 மணிநேரம் தொடர்ந்து டப்பிங் பேசிய கவுண்டமணி

சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடித்துள்ள ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. டப்பிங் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இதில் கலந்து கொண்ட 84 வயதான கவுண்டமணி 8 மணிநேரம் தொடர்ந்து டப்பிங் பேசியுள்ளார். அரசியலை நையாண்டி செய்யும் வேடத்தில் கவுண்டமணியும், யோகி பாபுவும் நடித்துள்ளனர்.
Similar News
News April 17, 2025
மலர்களின் விலை மளமளவென சரிவு!

தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை மளமளவென சரிந்துள்ளது. பங்குனி உத்திரம், தமிழ் புத்தாண்டு காரணமாக கடந்த வாரத்தில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்தது. இந்நிலையில், கடந்த வாரத்தில் ₹1500-க்கு விற்பனையான பிச்சிப்பூ இன்று(ஏப்.17) ₹500-க்கும், ₹800க்கு விற்பனையான மல்லிகை பூ ₹300-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஜாதிமல்லி, அரளி, சம்பங்கி, ரோஜா, கனகாம்பரம் ஆகியவற்றின் விலையும் குறைந்துள்ளது.
News April 17, 2025
சின்னத்துரை விவகாரம்.. தனிப்படை அமைத்த போலீஸ்

நெல்லை நாங்குநேரியில் மாணவர் சின்னத்துரையை தாக்கிய விவகாரத்தில் 2 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. சின்னத்துரையை அழைத்து தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத 4 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டு வழிப்பறி செய்த பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீஸ் தேடி வருகிறது.
News April 17, 2025
நடிகை மிஷேல் திடீர் மரணம்: மர்மத்தை நீக்கிய ரிப்போர்ட்

பிரபல ஹாலிவுட் நடிகை <<15593985>>மிஷேல் டிராக்டன்பர்க்<<>> (39) மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. நீரிழிவு நோய் பாதிப்பே மரணத்திற்குக் காரணம் என மருத்துவ அறிக்கை கூறுகிறது. தனது 3 வயதிலேயே விளம்பரங்களில் நடித்துப் பிரபலமான மிஷேல், 100க்கும் மேற்பட்ட படங்கள், சீரிஸில் நடித்துள்ளார். கடந்த பிப்.26-ம் தேதி நியூயார்க்கில் உள்ள வீட்டில் சடலமாக கிடந்த மர்மம், இன்று வெளியான மருத்துவ அறிக்கையின் மூலம் நீங்கியுள்ளது.