News October 16, 2024

வாகனங்களை மேம்பாலங்களில் பார்க் செய்துள்ளீர்களா?

image

மேம்பாலங்களில் பார்க் செய்யப்பட்ட கார்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என தனியார் வானிலை ஆர்வலர் வெதர்மேன் கூறியுள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி கரையை கடப்பதால், சென்னையில் அதி தீவிர கனமழைக்கான வாய்ப்பு குறைந்ததாகவும், அடுத்த 6 மணி நேரத்திற்கு மிதமான மழையே பெய்யும் எனவும் முன்னறிவித்துள்ளார். இதனால், சென்னையில் 20cmக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் கணித்துள்ளார்.

Similar News

News August 20, 2025

திமுகவுக்கு வலிமை கிடையாது: விஜயபாஸ்கர் விமர்சனம்

image

திமுகவுக்கு தனித்து எந்த வலிமையும் இல்லை; கூட்டணி கட்சிகளால்தான் பலமாக இருப்பதாக EX மினிஸ்டர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார். MGR, ஜெ.,வுக்கு பிறகு அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை EPS வலிமையுடன் வழிநடத்தி வருகிறார் எனக் கூறிய அவர், தற்போது DMK அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். இதனால், 2026-ல் கட்டாயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்; ADMK கூடுதல் பலத்துடன் களத்தில் நின்று வெற்றிபெறும் என தெரிவித்தார்.

News August 20, 2025

ஜெய்ஸ்வால் Vs சுப்மன் கில் : யார் சிறந்த டி20 வீரர்

image

2024 டி20 உலக கோப்பை சாம்பியனான ஜெய்ஸ்வாலை ஆசிய கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 23 டி20 போட்டிகளில் 164 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 5 அரைசதம், 1 சதம் உட்பட 723 ரன் அடித்துள்ளார். சுப்மன் கில் 21 போட்டிகளில் 139 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 3 அரைசதம், 1 சதம் உட்பட 578 ரன் அடித்துள்ளார். ஜெய்ஸ்வாலை விட குறைவான ஸ்ட்ரைக் ரேட் கொண்ட கில் எப்படி தேர்வானார் ?

News August 20, 2025

121 கிலோ தங்கம்… கடவுளுக்கு காணிக்கை கொடுத்த பக்தர்

image

திருப்பதி ஏழுமலையானுக்கு ₹140 கோடி மதிப்பு கொண்ட 121 கிலோ தங்கத்தை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார். ஏழுமலையானை வேண்டிக் கொண்டு தொழில் தொடங்கிய இவர், கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்துள்ளார். இதையடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக, 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக கொடுத்திருக்கிறார். பெயர் சொல்ல விரும்பாத அந்த பக்தருக்கு சொந்தமான நிறுவனத்தின் 60% பங்குகள் மட்டும் ரூ.6,000 கோடியாம்.

error: Content is protected !!