News March 17, 2024
மம்தா, கெஜ்ரிவால் பங்கேற்கவில்லை

ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதிப் பயணத்தின் நிறைவு விழா மும்பையில் நடைபெறுகிறது. இதில், I.N.D.I.A. கூட்டணியில் உள்ள தலைவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், முக்கியத் தலைவர்களாக கருதப்படும் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்கவில்லை. மம்தா பானர்ஜி உடல்நலக் குறைவால் பங்கேற்காத நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனிப்பட்ட காரணங்களுக்காக பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News November 18, 2025
பிஹார் CM பதவியேற்பு விழா: EPS-க்கு அழைப்பு

பிஹார் CM பதவியேற்பு விழாவில் பங்கேற்க EPS-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிஹாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் NDA கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, வரும் 20-ம் தேதி 10-வது முறையாக நிதிஷ் குமார் CM ஆக பதவியேற்க உள்ளார். இதில், PM மோடி, மூத்த மத்திய அமைச்சர்கள், NDA கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

திமுகவுடன் கூட்டணி ஏன்? மனம் திறந்த MP கமல்ஹாசன்

TV ரிமோட்டை தூக்கி எறிந்துவிட்டு தற்போது திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது ஏன் என்பது குறித்து முதல்முறையாக கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். தஞ்சையில் பேசிய அவர், ஜனநாயக ரீதியாக விமர்சித்ததாகவும், தற்போது மாநிலத்தின் ரிமோட் வேறொருவரிடம் சென்றுவிடக் கூடாது என்பதால் திமுகவுடன் கூட்டணி சேர்ந்ததாகவும் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில் விளக்கம் அளித்தார்.