News March 17, 2024
இறுதிக்கட்டத்தில் ‘கங்குவா’

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எடிட்டிங் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் கோடையில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ள நிலையில், படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்றும், அதில் படத்தின் வெளியீட்டு தேதி இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.
Similar News
News August 7, 2025
புதிய வரலாறு படைத்த டெய்லர்

ஜிம்பாப்வே வீரர் பிரெண்டன் டெய்லர், 21-ம் நூற்றாண்டில் நீண்டகாலம் (21Y 93D) சர்வதேச கிரிக்கெட் விளையாடிய வீர்ர் என்ற சாதனை படைத்திருக்கிறார் . ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனையை (21Y 51D) டெய்லர் முறியடித்துள்ளார். மே 6, 2004-ல் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்தார் டெய்லர். இன்று டெய்லருடன் ஓபனிங்கில் களமிறங்கிய பென்னட், 2004-ல் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்தபோது 5 மாதக் குழந்தையாக இருந்தார்.
News August 7, 2025
‘அம்மா… நான் போகிறேன்’

கந்துவட்டி கொடுமைகள் இன்றும் குறைந்தபாடில்லை. ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் வசித்துவந்த ரவிக்குமார், வட்டிக்கு ₹50,000 கடன் கேட்டுள்ளார். அதற்கு ₹15,000-ஐ பிடித்துக்கொண்டு ₹35,000 கொடுத்துள்ளனர். இதற்கு ₹1.20 லட்சம் வரை வட்டி மட்டுமே கட்டிய நிலையில், கடன் தீராத விரக்தியில், ‘நான் போகிறேன் அம்மா’ என தாய்க்கும் மனைவிக்கும் கடிதம் எழுதிவைத்து, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். என்ன சொல்ல?
News August 7, 2025
திமுகவுக்கு தூதுவிடும் OPS தளபதிகள்?

வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் திமுகவில் சேரும் முடிவில் இருக்கிறார்களாம். டெல்டாவில் வைத்தியலிங்கம் ஆதரவாளர்களை இழுக்கும் அசைன்மென்டை EPS கொடுத்துள்ளாராம். அதிமுகவுக்கு திரும்பினாலும் பழைய ’கெத்து’ இருக்காது என்பதால் திமுகவுக்கு தூதுவிட்டுள்ளாராம் வைத்தி. சிட்டிங் தொகுதி ஆலங்குளத்தை கொடுத்தால் திமுகவில் சேர தயார் என மனோஜ் பாண்டியனும் டீல் பேசுவதாக கூறப்படுகிறது. தளபதிகளை தக்கவைப்பாரா OPS?