News October 16, 2024

கனமழை நீடிப்பு: சென்னை ஐகோர்ட்டுக்கு இன்று லீவ்

image

தொடர் கனமழை காரணமாகவும், அதி கனமழை எச்சரிக்கையாலும் சென்னை ஐகோர்ட்டுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான பணிகள் இன்று நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல், சென்னையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பெட்ரோல் நிலையங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய நிறுவனங்கள் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News August 15, 2025

ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவு.. பணவீக்கமும் வீழ்ச்சி!

image

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று(ஆக.14) மீண்டும் 10 காசுகள் சரிந்து ₹87.57 ஆக உள்ளது. இதனிடையே, கடந்த ஜூலை மாதத்தில், மொத்த விலை பணவீக்கமும் மைனஸ் 0.58% என எதிர்மறையாக பதிவாகி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இதுதான் மிகவும் குறைவான பணவீக்க விகிதமாகும். உணவு பொருள்கள், கனிம எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றின் விலை சரிவால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

News August 15, 2025

79th Independence Day: நயா பாரத் என்றால் என்ன?

image

நாட்டின் 79-வது சுதந்திர தினம் ‘Naya Bharat’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. அதாவது, வளங்கள், பாதுகாப்பு மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும் ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற இலக்கை நோக்கிய பயணத்தையே இந்த நயா பாரத் குறிக்கிறது. இதனையொட்டி டெல்லி செங்கோட்டையில் 12-வது முறையாக கொடியேற்றும் PM மோடி, நாட்டு மக்களிடம் இது குறித்து உரையாற்றுகிறார்.

News August 15, 2025

குஜராத்தை விட TN வளர்ச்சியில் பின்னடைவு: L.முருகன்

image

காங்., ஆட்சிக் காலத்திலேயே அரசுத் துறைகள் அதிகளவில் தனியார்மயமாக்கப்பட்டதாக அமைச்சர் L.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உ.பி., பிஹார், குஜராத் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது TN வளர்ச்சியில் பின்னோக்கி உள்ளதாகவும் விமர்சித்தார். மேலும், தூய்மை பணியாளர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்த அவர், சமூக நீதியைப் பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை என சாடினார்.

error: Content is protected !!