News March 17, 2024

திருச்சியில் அதிரடி சோதனை

image

திருச்சி மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும் , அரசியல் கட்சிகள் பரிசு பொருட்களை தடுக்கவும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் இந்நிலையில் திருச்சி குடமுருட்டி சோதனை சாவடியில் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகன ஓட்டிகளிடம் வாகனங்களில் முன்புறமுள்ள கட்சி கொடிகளை அகற்ற அறிவுறுத்தினர்.

Similar News

News August 27, 2025

இருங்களூர்: உயர்வுக்கு படி முகாம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் 2024-25 கல்வியாண்டில் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அனைவரும் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “உயர்வுக்கு படி முகாம்” இருங்களூர் எஸ்.ஆர்.எம் கல்வி வளாக கூட்ட அரங்கில் ஆக.28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 26, 2025

திருச்சி: தொழில்நுட்ப பணிகள் தேர்வு தேதி அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு திருச்சி மாவட்டத்தில் வரும் 31-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 15 தேர்வு மையங்களில் 4415 பேர் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வு பணிகளுக்கென 15 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு மையங்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 26, 2025

மலைக்கோட்டையில் 150 கிலோ கொழுக்கட்டை தயாரிக்கும் பணி

image

திருச்சி, மலைக்கோட்டையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மலைக்கோட்டை மடப்பள்ளியில் 150 கிலோ எடை கொண்ட ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி இன்று காலை சிறப்பு பூஜையுடன் துவங்கியது. இதையொட்டி நாளை காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. 7 மணிக்கு மேல் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு கொழுக்கட்டை எடுத்துச் சென்று சாமிக்கு படைக்கப்பட உள்ளது.

error: Content is protected !!