News March 17, 2024
நாட்டுதுப்பாக்கி மற்றும் கரி மருந்து பறிமுதல்

வேலூர், பேரணாம்பட்டு மொரசப்பள்ளி கிராமத்தில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த பிச்சாண்டி என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் கரி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்த பேரணாம்பட்டு வனத்துறையினர் பிச்சாண்டியை பேரணாம்பட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 13, 2026
அணைக்கட்டு பகுதியில் அணிவகுப்பு

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.U. சிவராமன் உத்தரவின்படி அணைக்கட்டு பகுதியில் இன்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கெங்கநல்லூர் சந்தைமேடு முதல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வரை நடைபெற்ற இந்த அணிவகுப்பிற்கு, துணைக் காவல் கண்காணிப்பாளர் நந்தகுமார் தலைமை தாங்கினார். இதில் மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பங்கேற்றனர்.
News March 13, 2026
வேலூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நாளை (மார்ச் 14) வேலூர், குடியாத்தம், காட்பாடி ஆகிய நீதிமன்றங்களில் ‘தேசிய மக்கள் நீதிமன்றம்’ நடைபெற உள்ளது. நிலுவையிலுள்ள உரிமையியல், வாகன விபத்து, காசோலை மற்றும் சமரசம் செய்யக்கூடிய குற்ற வழக்குகளுக்குத் தீர்வு காணப்படவுள்ளது. வழக்காடிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, பிரச்சனைகளுக்குப் சுமூகமாகத் தீர்வு கண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
News March 13, 2026
வேலூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, வேலூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9042144504-ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க


