News October 15, 2024
மகளிர் உரிமைத்தொகை ₹1,000 வரவு வைக்கப்பட்டது

மகளிர் உரிமைத் தொகையின் 14ஆவது தவணை இன்று பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு, தமிழக அரசு மாதம் தலா ₹1,000 வழங்குகிறது. இதுவரை 13 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 14வது தவணை, இன்று காலை பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. உங்களது வங்கிக் கணக்கில் இந்த பணம் வந்ததா?
Similar News
News August 15, 2025
கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் அண்ணாமலை?

தமிழகம் வந்த பாஜகவை சேர்ந்த பி.எல்.சந்தோஷ் OPS-யை சந்திக்கவில்லை. இது ஏன் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகிவுள்ளன. அதில், OPS-யை சந்திக்க அண்ணாமலை நேரம் கேட்டதாகவும், ஆனால் இந்த சந்திப்பால் இபிஎஸ் அதிருப்தி ஆகிவிடக்கூடாது, மேலும் அண்ணாமலையின் முயற்சி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவது போல் தெரிவதால் சந்திப்பை தவிர்க்குமாறும் பாஜக மூத்த நிர்வாகிகள் சந்தோஷிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
News August 15, 2025
பாக்., இந்தியாவிடம் மோசமாக தோற்கும்: EX பாக் வீரர்

லெஜண்ட்ஸ் லீக் போன்று ஆசிய கோப்பையிலும் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என முன்னாள் பாக்., வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்தியா விளையாடினால் பாக்., மோசமாக தோற்கும் என்றும், AFG-யிடம் தோற்றால் கூட ரசிகர்கள் கவலைப்பட மாட்டார்கள், ஆனால் இந்தியாவிடம் தோற்றால் பைத்தியம் பிடித்தது போல ரியாக்ட் பண்ணுவார்கள் என கூறினார். சமீப காலமாக பாக் அணி மோசமான பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News August 15, 2025
ஆகஸ்ட் 15: வரலாற்றில் இன்று

* 1947 – இந்தியா சுதந்திரமடைந்த நாள். இன்று 78-வது சுதந்திர தினம்.
* 1872 – இந்தியத் தேசியவாதியும், ஆன்மிகத் தலைவருமான அரவிந்தர் பிறந்த தினம்.
* 1914 – பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.
* 1948 – கொரியக் குடியரசு உருவானது.
* 1964 – நடிகர் அர்ஜுன் பிறந்தநாள்.