News October 15, 2024

மீனவர்கள் கைதற்கு அதிமுக மீனவர் அணி கண்டனம்

image

தமிழக மீனவர்கள் 21 பேரை சிங்கள கடற்படையினர் கடந்த ஒன்பதாம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களின் நான்கு விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையால் கடந்த 4 மாதத்தில் 425 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு 196 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் மெத்தனம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க அதிமுக மீனவர் அணி மாநில இணை செயலாளர் பசிலியான் இன்று அறிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News November 11, 2025

குமரி: வேலை தேடி அலையுறீங்களா.? இத செய்யுங்க.!

image

1. இங்கு <>க்ளிக் <<>>செய்து TN வேலை வாய்ப்பு இணையதளத்தில் NEWUSER ID உருவாக்குங்க…
2. உங்கள் பெயர், கல்வித்தகுதி, இமெயில் ஐடி பதிவு செய்யுங்க.
3.பின்னர் LOGIN செய்து உங்கள் ஆவணங்களை Upload பண்ணுங்க..
4. கல்வி சான்றிதழ்களை பதிவு செய்யுங்க.. இனி வேலை வாய்ப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும்..
(குறிப்பு: டிகிரி முடித்தவர்கள் மட்டுமல்ல 8 – 12ம் வகுப்பு படித்தவர்களுக்கும் தான்) SHARE பண்ணி உதவுங்க.

News November 11, 2025

குமரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேணுமா – APPLY NOW!

image

குமரி மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும்<> இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்க. SHARE பண்ணுங்க..

News November 11, 2025

குமரி: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

image

தெரிசனங்கோப்பு பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்கள் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகே நின்று கொண்டிருந்தபோது ராமசுப்பு (65 ) என்பவர் அவர்களை அழைத்துச் சென்று உணவு வாங்கிக் கொடுத்து பின்னர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் ராமசுப்பு மீது வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று முதியவர் ராமசுப்புக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!