News March 17, 2024
கோவை: சலூன் கடை உரிமையாளரிடம் ரூ.38.50 லட்சம் மோசடி

சிங்காநல்லூரில் சலூன் நடத்தி வரும் ரமேஷ் பழனியப்பனுக்கு கடந்த டிச.மாதம் செல்போனுக்கு வந்த மெசேஜில் தங்களது நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதால் குறைந்த காலத்தில் அதிக லாபம் பெறலாம் என குறிப்பிட்டு இருந்துள்ளது. இதனை நம்பி ரூ.38.50 லட்சத்திற்கு பங்குகளை வாங்கியுள்ளார். பின் பணத்தை திரும்ப பெற முடியவில்லை. இப்புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News November 4, 2025
அறிவித்தார் கோவை கலெக்டர்

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு வருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி, காரமடை ஒன்னிபாளையம் கருப்பராயன் திருக்கோயில் சுற்றியுள்ள பகுதிகள், பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம் மற்றும் மிக முக்கிய விருந்தினர் பயணிக்கும் சாலைகள் ஆகியவை, தற்காலிக சிவப்பு மண்டல பகுதிகளாகவும், இன்று (நவ.4) இரவு 8 மணி வரை ட்ரோன்கள் இயக்க தடை விதித்தும் கோவை கலெக்டர் பவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
News November 4, 2025
TNAU-வில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக காளான் வளர்ப்பு பயிற்சி (05.11.2025) அன்று நடைபெற உள்ளது. பயிற்சி நேரம் காலை 10 முதல் மாலை 5 மணி வரை ஆகும். மேலும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0422-6611336 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
BREAKING: கோவையில் சுட்டுப்பிடித்த போலீஸ்

கோவை விமான நிலையம் பகுதியில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு, 3 பேர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், 3 பேரையும் போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். காயமடைந்த குணா, சதிஸ், கார்த்திக் ஆகிய 3 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


