News October 15, 2024
தடையின்றி செல்போன் சேவை கிடைக்க ஏற்பாடு

கனமழையால் செல்போன் சேவை தடைபடாமல் கிடைக்கும் வகையில், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு நிறுவனத்தின் சேவை துண்டிக்கப்பட்டால், மற்ற நிறுவனங்களின் உதவியுடன் செல்போன் சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, Airtel, Jio உள்ளிட்ட நிறுவன பிரதிநிதிகள் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 16, 2025
DMKவில் இணையும் தம்பிதுரை? சற்றுநேரத்தில் விளக்கம்

OPS, TTV விவகாரத்தில் செய்தியாளர்கள் முன்னிலையிலேயே தம்பிதுரையை EPS கடிந்து கொண்டார். இதனால் EPS மீது அதிருப்தியில் உள்ள தம்பிதுரை அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணையவுள்ளதாக செய்தி வெளியானது. ஆனால், அதற்கு அவரது தரப்பில் இதுவரை எந்த மறுப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில், இன்னும் சற்றுநேரத்தில் அவர் அதிகாரப்பூர்வமாக விளக்கமளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News August 16, 2025
இன்ஸ்டா ரீல்ஸ்களுக்கு இனி தமிழகத்தில் கிடுக்குப்பிடி?

பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கூடிய ரீல்ஸ் அதிகமாகிவிட்டது. இதனைக் கண்காணிக்கும் சைபர் பிரிவு, சிலருக்கு எச்சரிக்கை செய்து அபராதம் விதிக்கிறது. இந்நிலையில், இதுபோன்ற வன்முறையைத் தூண்டும் பதிவுகளை தடுக்கவும், நீக்கவும் கோரி இன்ஸ்டாகிராம் நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் கடிதம் அனுப்பவுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷ்னர் அருண் கூறியுள்ளார். கடிவாளம் போடப்படுமா?
News August 16, 2025
இன்று இதை செய்தால், 1 கோடி பிறவி பலனை அடையலாம்!

இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சாஸ்திரங்களின் படி, கோயிலில் அஷ்டோத்திர பூஜை செய்து கிருஷ்ணரை வழிபட்டால், ஒரு கோடி பிறவிகளின் பலனை அடையலாம் என நம்பப்படுகிறது. இது குடும்பத்தின் செல்வ செழிப்பை அதிகரித்து, அனைவருக்கும் புண்ணியம் கிடைக்க செய்யும் எனவும் கூறப்படுகிறது. இப்பூஜையை செய்ய முடியாதவர்கள், கிருஷ்ணரை மனதார வழிபட்டாலே, அனைத்து பாவங்களும் கழிந்துவிடும். SHARE IT.