News March 17, 2024
படங்களுக்கு தமிழ் பெயர் வையுங்கள்

முடிந்தவரை படங்களுக்கு தமிழ் பெயர்களை வையுங்கள் என திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி வலியுறுத்தியுள்ளார். இயக்குநர்கள் சங்க தேர்தலில் வாக்களித்த பின் பேசிய அவர், “படங்களுக்கு தமிழ் மொழியை தாண்டி வேறு மொழியில் பெயர் வைப்பதில் எனக்குமே உடன்பாடு இல்லை. OTT தளங்களில் மிகப்பெரிய அளவில் வியாபாரம் நடைபெறுவதால், படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வணிக நோக்கமே முழு காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 10, 2025
3 நாள்கள் தொடர் விடுமுறை.. வேகமாக நடக்கும் புக்கிங்

வரும் <<17334045>>15, 16, 17-ம் தேதிகளில்<<>> பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறையாகும். இதனால், சொந்த ஊர்களுக்கு செல்வோர் ரயில், பஸ்களில் புக் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட எழும்பூர் – செங்கோட்டை, <
News August 10, 2025
இது நல்லதல்ல: திருமாவை எச்சரிக்கும் OPS

திராவிட அரசியலில் எம்ஜிஆர் பார்ப்பனியத்தை புகுத்தியதாக விமர்சித்த திருமாவுக்கு OPS கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்த திருமாவளவனின் கருத்து அவருக்கு நல்லதல்ல, அவரின் அரசியல் மேம்பாட்டிற்கு வழிவகுக்காது என்று எச்சரித்த OPS, கூடுதல் தொகுதிக்காகவும், அமைச்சர் பதவிக்காகவும் திமுக தலைவர்களை புகழ்ந்து பேசுவதாகவும், அதிமுக தலைவர்களை தாக்குவதாகவும் விமர்சித்துள்ளார்.
News August 10, 2025
வாக்காளர்கள் நீக்கத்திற்கான காரணம் கூற முடியாது: ECI

பிஹாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வழங்க முடியாது என SC-ல் ECI பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டியது கட்டாயமல்ல எனவும் நீக்கத்திற்கான காரணம் குறித்து கூறமுடியாது எனவும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம்(ECI) இந்த முடிவை தெரிவித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?