News March 17, 2024
“திமுக பெற்றது பாவப்பணம்”

மக்களின் உயிரைப் பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் இருந்து திமுக பணம் வாங்கியதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். FUTURE GAMINGS நிறுவனம் தேர்தல் பத்திரம் மூலம் திமுகவுக்கு ₹509 கோடி வழங்கியுள்ளது. இதனை X தளத்தில் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றுள்ள திமுவுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
Similar News
News November 3, 2025
விஜய்க்கு பிரபல நடிகர் ஆதரவு

விஜய் நிச்சயமாக தமிழ்நாட்டை ஆள்வார் என நடிகர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். விஜய்க்கு தோல்வி என்பதே கிடையாது என்றும், நல்ல மாமனிதர் அவர் எனவும் பெஞ்சமின் குறிப்பிட்டுள்ளார். மேலும், எம்ஜிஆர் சின்ன குழந்தைகள் மனதில் இடம்பிடித்து CM ஆனார். அதேபோல் விஜய்யும் குழந்தைகள் மனதில் இடம்பிடித்துள்ளார். நிச்சயமாக தமிழ்நாட்டை ஆள்வார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News November 2, 2025
வீட்டில் நாய் வளர்க்கும் முன் இதை பாருங்க

வீட்டில் நாய் வளர்ப்பது ஒரு அழகான அனுபவமாகும். இதற்கு பொறுப்பும் நேரமும் தேவை. நாயை அன்புடன் கவனித்தால் அது வாழ்நாள் முழுவதும் நம்மை நம்பிக்கையுடன் நேசிக்கும். வீட்டில் நாய் வளர்ப்பதற்கு முன் தெரிந்திருக்க வேண்டிய 8 முக்கிய விஷயங்கள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு நாய் பிடிக்குமா? கமெண்ட் பண்ணுங்க.
News November 2, 2025
இரவு 10 மணிக்கு மேல் அந்தப் படம் பார்க்கிறீர்களா?

இரவில் ஹாரர் படங்கள் பார்ப்பதை சிலர் வழக்கமாக வைத்திருப்பர். பயத்துடன் அந்தப் படங்களை பார்த்தாலும், அந்த வழக்கத்தை கைவிட மாட்டார்கள். இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், தூங்கச் செல்லும் முன்பு, அதாவது 10 மணிக்கு அத்தகைய படத்தைப் பார்ப்பது, மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்யும். இது தூக்கத்தை பாதிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. நீங்கள் இரவில் ஹாரர் படம் பார்ப்பவரா? கமெண்ட் பண்ணுங்க.


