News October 15, 2024
மழை பாதுகாப்பு: மின் சேவை தொடர்பு எண்கள் அறிவிப்பு

சூறைகாற்று, இடி, மின்னல், மழை, நேரங்களில் மின்பாதைகள், மின்கம்பங்கள், மின்சாதனங்கள், மரங்கள் அருகிலேயோ அல்லது அதற்கு கிழோ பொதுமக்கள் நிற்க வேண்டாம். மேலும், மின்சாரம் சம்பந்தமான சேவைக்கு, மின்தடை நீக்கும் மைய எண்களான 94987 94987, 94458 59032, 94458 59033 & மின் நுகர்வோர் சேவை மைய எண் 94458 59034 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News August 25, 2025
எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

நெல்லை மாவட்ட அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வரும் 28ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எரிவாயு பதிவு செய்தல் உள்ளிட்ட குறைகளை நுகர்வோர் நேரில் தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
மாவட்டத்தில் இன்று இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (ஆக.25) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News August 25, 2025
கூடங்குளம் அருகே பள்ளி மாணவன் மயங்கி விழுந்து பலி

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே பள்ளிக்குச் சென்று திரும்பிய பிளஸ் டூ மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்ற மாணவன் நல்ல முத்து (17) மயங்கி விழ, அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற நிலையில், ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கூடங்குளம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.