News March 17, 2024
வளர்ந்த இந்தியாவுக்கு 400 இடங்கள்

இந்தியா வளர்ச்சியடைய 400 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அங்கு பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கு 400 இடங்கள், வளர்ந்த ஆந்திராவுக்கு 400 இடங்கள் என மொத்த நாடும் கூறுவதாக தெரிவித்தார். ஆந்திராவில் பாஜக கூட்டணியில் TDP, பவண் கல்யாண் கட்சிகள் உள்ளன.
Similar News
News October 27, 2025
சற்றுமுன்: கண்ணீருடன் விஜய்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கண்ணீருடன் விஜய் ஆறுதல் கூறி வருகிறார். நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கும் 33 குடும்பங்களை தனித்தனியாக விஜய் சந்தித்து வரும் நிலையில், அவருடன் கட்சி நிர்வாகிகள் யாரும் இல்லை. மேலும் கூடுதல் நிதியுதவி செய்ய ஏதுவாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சுயதொழில், சொந்த வீடு, கடன் பிரச்னை உள்ளிட்ட கோரிக்கைகளை எழுத்துபூர்வமாகவும் பெறுகிறார்.
News October 27, 2025
CM பதவியை தக்கவைக்க அமைச்சரவையில் மாற்றம்

கர்நாடகாவில் காங்., ஆட்சி அமைத்தபோது, CM பதவியை சித்தராமையா, DK சிவக்குமார் ஆளுக்கு 2.5 ஆண்டுகள் பங்கிட ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, நவ.20 உடன் சித்தராமையா CM ஆகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஆனால், பதவியை விட விரும்பாத சித்தராமையா, அதற்காக அமைச்சரவையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கு சில அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நவ.15-ல் டெல்லி மேலிடத்தை சந்திக்கிறார்.
News October 27, 2025
PAK-AFG மீண்டும் மோதல்: 5 பாக். வீரர்கள் பலி

ஆப்கனுடனான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் போரை தொடங்குவோம் என பாக்., அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், ஆப்கன் எல்லையில் மீண்டும் மோதல் வெடித்தது. இந்த மோதலில், 5 பாக்., வீரர்கள், 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது. தங்களது எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதால் இந்த மோதல் ஏற்பட்டதாக பாக்., ராணுவம் குறிப்பிட்டுள்ளது.


