News March 17, 2024
சர்வதேச பாராகிளைடிங் போட்டி நிறைவு

கேரளாவில் நடைபெற்ற சர்வதேச பாராகிளைடிங் போட்டி இன்றுடன் நிறைவு பெற்றது. இடுக்கி மாவட்டத்தில் மார்ச் 14ஆம் தேதி தொடங்கிய போட்டி, இந்திய பாராகிளைடிங் சங்கத்தின் தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்படுகிறது. இதில், இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்பட பல நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்தனர். இந்தப் போட்டிகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
Similar News
News September 7, 2025
இந்தியாவிற்கு வர மறுக்கும் PAK மகளிர் அணி

இந்தியாவில் நடைபெற உள்ள ICC மகளிர் ODI உலகக்கோப்பை தொடக்க விழாவை பாக்., மகளிர் அணி புறக்கணிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் 30-ம் தேதி போட்டி தொடங்க உள்ள நிலையில், இத்தகைய அதிரடி முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. முன்னதாக, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக, பாக்., விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News September 7, 2025
கார்களின் விலையை ₹3.49 லட்சம் குறைத்த டொயோட்டா

GST 2.0 எதிரொலியாக டொயோட்டா நிறுவனம், ₹3.49 லட்சம் வரை கார்களின் விலையை குறைத்துள்ளது. Glanza – ₹85,300, Taisor – ₹1.11 லட்சம், Rumion – ₹48,700, Hyryder – ₹65,400, Crysta – ₹1.8 லட்சம், Hycross – ₹1.15 லட்சம், Fortuner – ₹3.49 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வர உள்ளது. முன்னதாக, டாடா, மஹிந்திரா, <<17632758>>ரெனால்ட்<<>> நிறுவனங்கள் விலை குறைப்பை அறிவித்தன.
News September 7, 2025
CM திட்டத்தை புறக்கணிக்கும் வருவாய் அலுவலர்கள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களை புறக்கணிக்கப் போவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. போதிய கால அவகாசம் வழங்காமல் இரவு, பகலாக பணி செய்ய நிர்பந்திக்கப்படுவதாகவும், வரும் 25-ம் தேதி 40,000 வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், விரைவில் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும் என்றும் எச்சரித்துள்ளது.