News March 17, 2024

திருச்சி பயணிகள் உடைமைகளில் தீவிர சோதனை

image

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கடத்தல் சம்பவங்களை தடுக்கும் வகையில் இன்று ரயில்வே பாதுகாப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி சுமார் 15க்கும் மேலான போலீசார் இந்த ரோந்து பணியில் ஈடுபட்டு, ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் படியாக நபர்களை விசாரித்தும், அவர்கள் உடைமைகளை வாங்கி பரிசோதனை செய்தனர்.

Similar News

News August 27, 2025

திருச்சி மாவட்டத்தில் 1182 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் முழுவதும் மொத்தம் 1182 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் விநாயகர் சிலைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சிலை அமைப்பாளர்களுடன் இணைந்து சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் 29-ஆம் தேதி சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளன.

News August 27, 2025

திருச்சி: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News August 27, 2025

திருச்சி: வேலை தேடுவோர் கவனத்திற்கு!

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண் இருவருக்குமான வேலை வாய்ப்பு முகாம் வரும் ஆக.,31ஆம் தேதி, டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற உள்ளது. இது குறித்த விவரங்களுக்கு 0431-2412726 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!