News October 15, 2024
பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நேற்று முன் தினம் முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் தேங்கிய பகுதிகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று திருச்சியில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஷேர் செய்யவும்
Similar News
News August 18, 2025
திருச்சியில் கஞ்சா விற்ற மூவர் மீது பாய்ந்த குண்டாஸ்

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த முகேஷ் என்பவரையும், புங்கனூர் அருகே கஞ்சா வைத்திருந்த குணப்பிரகாசம், ராம்ஜி நகரில் கஞ்சா வைத்திருந்த ரமணி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இம்மூவரின் தொடர்பு குற்ற நடவடிக்கைகளை தடுக்க. இவர்களை குண்டாஸ் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க திருச்சி எஸ்பி உத்தரவிட்டார்.
News August 17, 2025
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் பெற்றோரிடம் ஒப்படைப்பு

திருச்சி ரயில் நிலையத்தில் கடந்த ஆக.15ம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், சேலத்தை சேர்ந்த லட்சுமணன்(20) என்பவர் சுற்றித்திரிந்தார், அப்போது அரை மீட்டு செந்தண்ணீர்புரத்தில் உள்ள காப்பகத்தில் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (ஆக.17) லட்சுமணனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களை நேரில் வரவழைத்த ரயில்வே போலீசார், லட்சுமணனை ஒப்படைத்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
News August 17, 2025
திருச்சி: டிகிரி போதும்… LIC நிறுவனத்தில் வேலை!

திருச்சி மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது.காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிகுள் இங்கே<