News March 17, 2024

தென்காசி மக்கள் குறைதீர் நாள் முகாம் ரத்து 

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் 24ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் கிராமப்பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மறு அறிவிப்பு வரும் வரை நடைபெறாது என தெரிவித்துள்ளார்.

Similar News

News October 25, 2025

தென்காசி: போஸ்ட் ஆஃபிஸ் வங்கி வேலை அறிவிப்பு

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ஊதியமாக ரூ.30,000 வழங்கப்படும் நிலையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்த 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News October 25, 2025

தென்காசி: ரயில்வேல சூப்பர் வேலை!

image

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.நேரடி நேர்காணல் மூலம் தேர்வு.
5.மேலும் விபரங்களுக்கு இங்கு <>க்ளிக்<<>> செய்யவும்
சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News October 25, 2025

தென்காசி: காவலர் தேர்வு புது அறிவிப்பு இதோ!

image

தமிழக காவல்துறை பணியில் விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 09.11.2025 அன்று காலை 10.00 மணிக்கு தேர்வு நடைபெற உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து பயனர் எண், கடவுச்சொல் பதிவிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யுங்க.
1.செய்ய வேண்டியவை:
8 – 9 மணிக்கு ஹாலில் இருக்க வேண்டும்
ஹால் டிக்கெட், ப்ளாக் பேனா, வோட்டர் ஐடி, ஆதார், லைசன்ஸ்
2.செய்ய கூடாதவை:
போன், கால்குலேட்டர்
தகவல்களுக்கு: 7305159124. மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

error: Content is protected !!