News March 17, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அறிக்கை

image

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் உமா தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளதால் ஏற்கனவே தங்கள் சுய பாதுகாப்பிற்காக தக்க உரிமம் பெற்று வைத்துள்ள அனைத்துவிதமான துப்பாக்கிகள் மற்றும் அதன் இதர பொருட்களையும் அங்கீகரிக்கப்பட்ட ஆயுத கிடங்கு மற்றும் காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு ஆட்சியர் அறிக்கை இன்று  வெளியிட்டார்.

Similar News

News April 6, 2025

நாமக்கல் இளைஞர்களுக்கு குட் நியூஸ் !

image

ஐடி துறையில் வேலைக்காக அதிக அளவில் இளைஞர்கள் சென்னைக்கு படையெடுத்து வரும் நிலையில், தற்போது நாமக்கல்லில் மினி டைட்டல் பார்க் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த டைட்டில் பார்க்கின் கட்டட வரைபடம் வடிவமைப்பு முடிந்துள்ளது. இந்தக் கட்டடத்தை அமைப்பதற்கான டெண்டர் அரசால் விரைவில் கோரப்படும். ஐடி படித்த நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 6, 2025

சொத்து வரியில் 5 சதவீதம் தள்ளுபடி

image

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தாங்கள் 2025-26-ம் நிதியாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்துவரி தொகையினை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில் 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என நாமக்கல் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

News April 6, 2025

நாமக்கல்லில் இன்று மழை

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்து வரும் நான்கு நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 89.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியால மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க!

error: Content is protected !!