News March 17, 2024

சென்னையில் புதிய டாஸ்மாக் கடை மூடல்

image

சென்னை முகப்பேர் மேற்கு, ரெட்டி பாளையம் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. நேற்று புதிய மதுக்கடை திறக்கபட இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை உடனடியாக மூடப்பட்டது.

Similar News

News January 21, 2026

சென்னை: 8 உதவி காவல் ஆணையர்கள் இடமாற்றம்

image

சென்னை காவல் துறையின் கிழக்கு மண்டலத்தில் பணியாற்றி வந்த 8 உதவி காவல் ஆணையர்கள் புதிய மண்டலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.கீழ்பாக்கம், வேப்பேரி, மயிலாப்பூர், கொளத்தூர், கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, மாநகர குற்றப்பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, புலனாய்வு பிரிவுகளில் பணியாற்றிய அதிகாரிகள் புதிய பொறுப்பேற்றுள்ளனர்.

News January 20, 2026

சென்னையில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு…

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 94450 61913 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். *தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News January 20, 2026

விஷம் குடித்த பெண்ணை கைப்பற்றிய பெண் காவலர்

image

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று RPF பெண் காவலரான ஜிஷா ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, இளம் பெண் ஒருவர் தனியாக அழுது கொண்டிருப்பதை கவனித்த அவர், பெண்ணிடம் விசாரித்த போது, சமீபத்தில் தனது சகோதரர் உயிரிழந்ததாக கூறிய அந்த பெண், விரக்தியில் விஷம் குடித்ததாக தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர், பணியாளர்கள் உதவியுடன் பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இளம் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது

error: Content is protected !!