News October 15, 2024

அக்.15: வரலாற்றில் இன்று

image

1542: முகலாயப் பேரரசர் அக்பர் பிறந்தார்.
1815: நெப்போலியன் போனாபார்ட் செயின்ட் ஹெலினா தீவில் சிறை வைக்கப்பட்டார்.
1918: சீரடி சாய்பாபா மறைந்தார்.
1931: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தார்.
1935: டாடா நிறுவனம் முதல் விமான சேவையை தொடங்கியது.
சர்வதேச மாணவர்கள் தினம்
சர்வதேச கை தூய்மை தினம்

Similar News

News August 24, 2025

சென்னையில் நடிகை கைது

image

சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற புகாரில் ஆந்திராவைச் சேர்ந்த துணை நடிகை நாகம்மா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை இறந்த நிலையில், தாய் வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதனால், ஆதரவற்று இருந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி நாகம்மா இந்த கொடுமையை செய்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீஸ் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

News August 24, 2025

விசிலடிச்சான் குஞ்சாகி விட்டாரா விஜய்? அமைச்சர்

image

தவெக மாநாட்டில் ‘ஸ்டாலின் Uncle’ என முதல்வரை விஜய் குறிப்பிட்டதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், 50 ஆண்டு பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான முதல்வரை விஜய் இவ்வாறு விமர்சித்திருப்பதை ஏற்க முடியாது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தவெக தொண்டர்களே மெச்சூரிட்டி ஆன நிலையில், விஜய் விசிலடிச்சான் குஞ்சாகி விட்டாரா என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். உங்கள் கருத்து என்ன?

News August 24, 2025

இது Expiry date இல்லை.. இந்த நம்பரின் அர்த்தம்

image

சிலிண்டரின் உறுதியை 10 ஆண்டுகளுக்கு பிறகு கண்டிப்பாக பரிசோதிக்க வேண்டும். அதனை எப்போது செய்ய வேண்டும் என்ற குறியீடே Test date(சோதனை தேதி) ஆகும். இதில் (A25, B26, C27) எழுத்துக்கள் மாதத்தை குறிக்கின்றன. A (ஜனவரி- மார்ச்), B (ஏப்ரல்- ஜூன்), C(ஜூலை- செப்டம்பர்), D(அக்டோபர்- டிசம்பர்). எண்கள் வருடத்தை குறிக்கின்றன. 25, 26, 27 என்பது 2025, 2026, 2027 என்ற வருடத்தை குறிக்கிறது.

error: Content is protected !!