News October 14, 2024

பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை

image

போளூர் படவேடு செண்பகத்தோப்பு அணை நீர் கிடுகிடுவென நிரம்பி வருவகிறது. 62 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 55.37 அடி உயரம் நீர் நிரம்பி உள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்நேரமும் அணை திறக்கப்படலாம். கமண்டல நாகநதி ஆற்றின் கரை ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு போளூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News August 23, 2025

தி.மலை முதலமைச்சர் கோப்பைக்கான தேதிகள் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான தேதிகளை திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அலுவலர் அறிவித்துள்ளார். அதன்படி இதில் (26-08-2025) முதல் (10-09-2025) வரை மாவட்ட விளையாட்டு அரங்கில் பல்வேறு பிரிவுகள் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவருக்கு சான்றிதழ் பதக்கம் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

News August 23, 2025

தி.மலையில் ஆட்டோக்கு அதிக காசு கேட்டா இத பண்ணுங்க

image

ஆட்டோக்கள் மீட்டருக்கு மேல் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் உள்ளது. விதிமுறையின்படி ஆட்டோக்கள் முதல் 2 கி.மீ க்கு ரூ.30ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் நி.மி க்கு ரூ.1.50 வசூலிக்கலாம். இரவு(11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். கூடுதல் கட்டணம் வசூலித்தால் உங்க பகுதி <>RTO அலுவகத்தில்<<>> புகார் செய்யலாம். அவசியமான தகவல் ஷேர் பண்ணுங்க

News August 23, 2025

காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

image

2-ம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் வருகிற 28ந் தேதி (வியாழக்கிழமை) முதல் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!