News March 17, 2024

மயிலாடுதுறை புகார் தெரிவிக்க தொலைபேசி எண் வெளியீடு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அல்லது அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக எந்நேரமும் 1800-425-8970 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மயிலாடுதுறை தேர்தல் நடத்தும் அலுவலர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News January 21, 2026

மயிலாடுதுறை: சிறுவன் தூக்கிட்டு தற்கொலை – சோகம்

image

மயிலாடுதுறை – திருவாரூர் சாலை வரதாச்சாரியர் தெருவை சேர்ந்த தம்பதியினர் ராஜா – செல்வி. இவர்களது மகன் உமாநாத்(12), 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பொங்கல் தொடர் விடுமுறை முடிந்தும் பள்ளிக்கு செல்லாததால், செல்வி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த உமாநாத் அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 21, 2026

மயிலாடுதுறை: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரைச் சேர்ந்தவர் பாலமுருகன்(32). இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த வீரமணி என்பவரிடம் பணம் கேட்டு, அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வீரமணி அளித்த புகாரின்படி, பாலமுருகன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், மாவட்ட எஸ்பி பரிந்துறையின் படி, மாவட்ட ஆட்சியர் பாலமுருகனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்திரவிட்டார்.

News January 21, 2026

மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு துணை மின் நிலையத்தில் இன்று(ஜன.21) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மணல்மேடு, ராதாநல்லூர், கிழாய், கடலங்குடி, திருமங்கலம், காளி சித்தமல்லி, வடவஞ்சாறு, இளந்தோப்பு, பட்டவர்த்தி, திருச்சிற்றம்பலம், திருவாலபுத்தூர், வரதம்பட்டு , நமச்சிவாயபுரம், நாராயணமங்கலம், பாண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. SHARE IT

error: Content is protected !!