News October 14, 2024
கோவை: B.Ed சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு
கோவை, பாரதியார் பல்கலை தொலைநிலைக் கல்வி மையத்தின் கீழ் எட்டு பாடப்பிரிவுகளில் B.Ed படிப்பு வழங்கப்படுகிறது. நடப்புக் கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், மொத்தமுள்ள 500 இடங்கள் முழுமையாக நிரம்பவில்லை. இதையடுத்து விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும் நவ.15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
ஆசிரியர் கொலை: அரசை சாடிய வானதி சீனிவாசன்
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திராவிட மாடல் அரசின் கீழ் தமிழகத்தின் பாதுகாப்பு நிலை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அண்மையில் நடந்த ஆசிரியை கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி, பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 20, 2024
கோவையில் 65 பேர் மீது குண்டர் சட்டம்
கோவை எஸ்பி கார்த்திகேயன் சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று மாலை வெளியிட்ட செய்தி குறிப்பில் “பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும். இந்த ஆண்டில் இதுவரை 65 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 20, 2024
துக்க வீட்டில் தீ: பலி 3 ஆக உயர்வு
கோவை: கணபதி பகுதியில் துக்க வீட்டில் தீப்பிடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. கோவையில் நவ.16ஆம் தேதி துக்க வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் ராமலட்சுமி, பானுமதி ஆகியோர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரன்(50) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.