News October 14, 2024
மழை வெள்ளம் குறித்து புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையத்தின் தொலைபேசி எண்ணான 04546-250101 என்ற எண்ணிற்கு மழை மற்றும் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். மேலும் தமிழ்நாடு அரசால் TN-Alerts என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை Google Play Store பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் ஷஜீவனா இன்று (அக்.14) தெரிவித்துள்ளார்.
Similar News
News November 10, 2025
தேனி: டூவீலரில் இருந்து விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் (75). இவர் நேற்று (நவ.9) அவரது பேரனின் பைக்கில் பின்னால் அமர்ந்து பெரியகுளம் சாலையில் சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்த காளியம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 10, 2025
தேனி: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை., APPLY

தேனி மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Ticket Supervisor, Station Master உள்ளிட்ட 5810 பணியிடங்களக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க
News November 10, 2025
தேனி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்க? இத தெரிஞ்சுக்கோங்க

தேனி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் தேனி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000451, 9445000452 என்ற எண்களில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யவும்.


