News October 14, 2024
ALERT: போனில் இந்த LINK வந்தால் எச்சரிக்கை!

GMAIL-இல் AI மூலமாக பெரிய அளவில் மோசடி அரங்கேறி வருவதாக சைபர் க்ரைம் எச்சரித்துள்ளது. அதாவது, போனுக்கு திடீரென ஒரு மெசேஜ் வருமாம். அதில், GMAIL Recovery Request என ஒரு லிங்க் வருமாம். தப்பித்தவறி இதில் வரும் எந்த லிங்க்கை தொட்டாலும், நமது மெயிலை ஹேக் செய்து, வங்கிக்கணக்கை திருடி, பணத்தை அபேஸ் செய்து விடுவார்களாம். எனவே, GMAIL Recovery என ஏதாவது கண்ணில் பட்டால், அதை தொட வேண்டாம். Share It.
Similar News
News August 17, 2025
டிரம்ப் வரிவிதிப்பு: 50 நாடுகளை குறிவைக்கும் இந்தியா

வர்த்தகத்திற்கு அமெரிக்காவை மட்டும் சார்ந்து இருக்க கூடாது என்பதற்காக, இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 50 நாடுகளில் ஏற்றுமதியை விரிவுபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 90 சதவீதமாகும். இந்திய பொருள்களுக்கு டிரம்ப் 50% வரிவிதித்த நிலையில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
News August 17, 2025
திருமண விஷயத்தில் சச்சினை ஃபாலோ பண்ணும் மகன்!

அர்ஜுன் டெண்டுல்கர் – சானியா சந்தோக் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. தற்போது அவர்களின் வயது வித்தியாசம் பேசுபொருளாகியுள்ளது. 1999 செப்., 24-ம் தேதி அர்ஜுன் பிறந்த நிலையில், சானியா 1998 ஜூன் 23-ம் தேதி பிறந்துள்ளார். அதன்படி, அர்ஜுனை விட சானியா ஒரு வயது மூத்தவர். சச்சின் தன்னை விட 5 வயது மூத்த அஞ்சலியை திருமணம் செய்த நிலையில், அவரது மகனும் அப்பாவை ஃபாலோ பண்ணுவதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
News August 17, 2025
துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென அப்பதவியில் இருந்து விலகினார். இதனால், வரும் 9-ம் தேதி அப்பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், NDA கூட்டணி சார்பில், மகாராஷ்டிரா கவர்னராக உள்ள ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் PM மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு JP நட்டா அறிவித்துள்ளார்.